விண்ணைத் தொடும் தங்கம் விலை-அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் சுப காரியங்களுக்கு தங்கம் வாங்கச் செல்லும் மக்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு துவக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,816 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து புத்தாண்டு பிறக்கப் போவதை முன்னிட்டு டிசம்பர் மாத இறுதியில் ரூ.8,000த்தைத் தாண்டியது.
புத்தாண்டை முன்னிட்டு அதிகம் பேர் புதிய நகைகள் வாங்குவார்கள் என்பதால் இந்த விலை உயர்வு இருக்கும். ஜனவரியில் விலை குறைந்து விடும் என அனைத்து தர மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், முழுவதும் விலை குறையவில்லை.
சில தினங்களுக்கு பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்த போது தங்கத்தின் விலை வெகுவாக குறையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தங்கம் விலையில் சிறிதளவே மாற்றம் இருந்தது.
ஆனால் தற்போது யாருமே எதிர்பாராத வண்ணம் தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.8,728 ஆக அதிகரித்துள்ளது. 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,091 ஆக உள்ளது. 1 பவுன் எடையுள்ள நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் அனைத்தும் சேர்த்து ரூ.10,000த்தை தாண்டி விடுகிறது.
மக்கள் அதிர்ச்சி:
தை பிறந்துவிட்டதால் தொடர்ந்து ஏராளமான முகூர்த்த நாட்கள் வருகின்றன. இதனால் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களுக்கு நகைகள் வாங்கச் செல்பவர்களை இந்த விலை உயர்வு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications