தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 10 அரசு பொறியியல் கல்லூரிகள்
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் மேலும் 10 அரசு பொறியியல் கல்லூரிகள் துவங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பதில்:-
தமிழ்நாட்டில் 288 ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகள் மத்திய கல்வித்துறையிடம் அனுமதி பெற்று அமைக்கப்பட்டவை. இதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் கொடுப்பதில்லை.
பல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் முறையான அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. அது போன்ற சூழ்நிலை வரும்போது மாணவர்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள்.
தற்போது 149 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மாநில அரசின் அனுமதி பெறாமலும், பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெறாமலும் நடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பட்டியலை பத்திரிகைகளில் வெளியிடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 7 புதிய கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் போன்ற பட்டய படிப்புகளை ஷிப்டு முறையில் நடத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதிக்க முடியும்.
பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்படும். என்ஜினீயரிங் கல்லூரி இல்லாத இடங்களில் இந்த ஆண்டுக்குள் 10 என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications