இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க திருமாவளவன் கோரிக்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்திய திருமாவளவன், புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றார். இதற்கு காங்கிரஸ் மற்றும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திருமாவளவனை கைது செய்யக் கோரி சட்டசபையில் வெளிநடப்பு செய்து தனது எதிர்ப்பைக் காட்டியது காங்கிரஸ்.
காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தி வரும் திமுக அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதையடுத்து இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய உயர் மட்டக் கூட்டத்தில் புலிகளை ஆதரிப்போர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி அரசுக்கு தர்ம சங்கடத்தைத் தர வேண்டாம் எனவும் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் பிரச்சனைக்கு காரண கர்த்தாவான திருமாவளவன் மீண்டும் தனது நிலையை உறுதிபடுத்தியுள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
புலிகள் மீதான தடையை நீக்கி, எல்டிடிஈ அமைப்பை விடுதலைப் போராட்ட அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்று நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்துரிமை, ஜனநாயக உரிமை. அதில் தவறேதும் இல்லை.
இது தான் எங்கள் அமைப்பின் நிலை. அதற்காக எங்களை சட்டப்படி தண்டிக்க ஆட்சியாளர்கள் கருதினால் அதற்கும் நாங்கள் தயார்.
சர்வதேச கடல் பகுதியில் கண்ணி வெடிகளைப் போட்டு வைத்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதையே தடுக்க முயல்கிறது இலங்கை கடற்படை. இந்திய மீனவர்களைக் காக்க இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும்.
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கட்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்கள் கட்சத் தீவில் ஓய்வெடுக்கவும், வலைகளை காய வைக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தீவுப் பக்கமே மீனவர்களை வர விடாமல் தடுத்து சுட்டு, தாக்கி, கொன்று வருகிறது இலங்கை.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசின் உதவித் தொகை பெற 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலை உரிமையை தடுக்கும் செயல். இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 5ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications