டாலர் மதிப்பு சரிவு: சம்பளத்தை குறைக்கும் டிசிஎஸ்-விப்ரோ
மும்பை: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபத்தில் பெரும் ஓட்டை விழுந்து வருகிறது. இதையடுத்து பல சாப்ட்வேர் நிறுவனங்களின் தங்களது ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்க ஆரம்பித்துள்ளன.
பல நிறுவனங்கள் ஊதிய உயர்வை மட்டுப்படுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் கொடுத்து வரும் ஊதியத்தையே குறைக்க ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களின் புராஜெக்டுகள் அமெரிக்காவையே சார்ந்துள்ளதால் இந்த நிலை.
ரூபாயின் மதிப்பு அதிகரித்துவிட்டதால், டாலர் மதிப்பில் இந்த நிறுவனங்கள் ஈட்டும் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 12 சதவீதம் அதிகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சாப்ட்வேர் நிறுவனங்களின் வருமானம் 12 முதல் 15 சதவீதம் வரை குறைந்துவிட்டது.
இதையடுத்து விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் ஊதியத்தில் உள்ள வேரியபல் அலவன்ஸை (variable allowance) குறைத்துவிட்டன. இதன்மூலம் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என இந்த நிறுவனங்கள் கருதுகின்றன.
சிறிய நிறுவனங்களில் நிலைமை இன்னும் மோசம். அவை புதிதாக வேலைக்கு ஆட்களை சேர்ப்பதை நிறுத்த ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க பொருளாதாரத்தில் ேதக்கம் ஆரம்பித்துவிட்ட நிலையில் ரூபாயின் மதிப்பு இப்போதைக்கு குறையாது என்றே தெரிகிறது. இதனால் சாப்ட்வேர் நிறுவனங்கள் சந்திக்கும் இந்த சவால் இப்போதைக்கு சீராகாது.
டாலர் மதிப்பு குறைந்ததால் இந்தியாவில் ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியை சார்ந்துள்ள தொழில்கள் பெரும் அடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications