25 லட்சம் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
டெல்லி: பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் சிறுபான்மையினர் சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அடுத்த 5 வருடத்தில் ரூ. 1,800 கோடி உதவித் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூறுகையில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையில் 30 சதவீதம் மாணவிகளுக்காக ஒதுக்கப்படும்.
இதன் மூலம் 25 லட்சம் மாணவ, மாணவியர் பலன் பெறுவர். இந்த உதவித் தொகையில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். 25 சதவீதத்தை மாநில அரசுகள் வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசங்களுக்கான முழுத்தொகையும் மத்திய அரசே வழங்கும்.
ஒரு மாணவருக்கு அதிகபட்சம் ரூ.350 வழங்கப்படும். பள்ளிகளில் ஆறாம் வகுப்பிற்கு மேல் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.600ம் வழங்கப்படும் என்றார் ப.சிதம்பரம்.
இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தை அனைத்திந்திய இஸ்லாமிய சட்ட வாரியம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் கமல் பரூக்கி கூறியதாவது, சிறுபான்மையினர் நலத்தில் அரசு கொண்டுள்ள அக்கறை வரவேற்கத்தக்கது. இந்த உதவித் தொகை கல்வியில் மிகவும் பின்தங்கியிப் போயுள்ள சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications