4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து
சென்னை: நரேஷ்குப்தா, சாந்த ஷீலா நாயர், அருண் ராமநாதன், கெளரிசங்கர் ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளும் மூத்த அதிகாரிகள் ஆவர். தற்போது நரேஷ்குப்தா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருக்கிறார்.
கெளரிசங்கர் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
சாந்த ஷீலா நாயர் டெல்லியில் மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளராக பணியாற்றுகிறார்.
அருண் ராமநாதன் மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சக செயலாளராக பணியாற்றி வருகிறார்.
தற்போது அனைவருக்கும் தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்தஸ்து உயர்வுக்குப் பின்னர் நான்கு பேரும் அதே பணிகளில் தொடருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நால்வரில் 2009ம் ஆண்டு அருண் ராமநாதன் ஓய்வு பெறுகிறார். கவுரிசங்கர், நரேஷ்குப்தா, சாந்த ஷீலா நாயர் ஆகியோர் 2010ல் ஓய்வு பெறவுள்ளனர்.












Click it and Unblock the Notifications