அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் வெட்டிக் கொலை
சிதம்பரம்: சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் நேற்று காலை அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், பம்பரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் சிவசாமி (38). இவர் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சிவசாமி நேற்று காலை அலுவலகத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது 9-40 மணியளவில் பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டிற்கு அருகில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதையடுத்து சிவசாமி பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவசாமியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். சிவசாமியை கொலை செய்த கும்பல் யார், முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications