காங். செயலாளர் வெட்டிக் கொலை-கள்ளச் சாராய கும்பல் கைவரிசை
சென்னை: சென்னை அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய கும்பலை போலீசாரிடம் காட்டிக் கொடுத்த வார்டு காங்கிரஸ் செயலாளரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
மறைமலைநகர் சின்னசெங்குன்றம் காலனியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் அப்பகுதியின் 11வது வார்டு காங்கிரஸ் செயலாளராக உள்ளார். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வீரபத்திரனை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தியதில், கள்ளச் சாராய கும்பலை காட்டி கொடுத்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இப் பகுதியில் ரவி என்பவர் கள்ளச் சாராயம் விற்று வருகிறார். சமீபத்தில் ரவி கள்ளச் சாராய கேன்களை சகாதேவன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். இது குறித்து வீரபத்திரன் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மதுவிலக்கு போலீசார் விரைந்து வந்துப 56 கேன்களில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை கைப்பற்றி, சகாதேவனையும் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி தனது கூட்டாளிகளுடன் வந்து வீரபத்திரனை வெட்டி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மறைமலைநகர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரவி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications