ஜப்தி-வீதிக்கு வந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள்!

தேனி: தேனியில் இழப்பீடு வழங்காத கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது.
போடி அருகே 11.55 ஏக்கர் நிலம் ஆதி திராவிடர்களுக்கு வீடு கட்ட 1982ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு செய்வது குறித்த வழக்கில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
நீதிமன்ற உத்திரவுப்படி மாவட்ட நிர்வாகம் நில உரிமையாளர்களுக்கு ரூ. 77 லட்சம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தது.
இதனால் நில உரிமையாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். பெரியகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இழப்பீடு வழங்காத தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும், மற்றும் அசையாத சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
போலீசார் முன்னிலையில் கோர்ட் அமீனாக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையில் உள்ள அசையும், மற்றும் அசையாத சொத்துக்களையும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் உள்ள சொத்துக்களில் உள்ள 26 பொருட்களையும் ஜப்தி செய்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் குழு இழப்பீடு வழங்க உறுதி மொழி கொடுத்தை அடுத்து கோர்ட் அமீனாக்கள் ஜப்தி செய்த பொருட்களை அங்கேயே விட்டு விட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் தேனி கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications