சேது சமுத்திர திட்டத்தால் நாட்டுக்கு ஆபத்து-கடலோர காவல்படை

இந்த கப்பல் போக்குவரத்து கால்வாயை விடுதலைப் புலிகள் பயன்படுத்தக் கூடும் என்றும், கடற் புலிகளால் இந்தியாவுக்கும் இப் பகுதியின் கப்பல் போக்குவரத்துக்கும் ஆபத்து விளையக் கூடும் என்றும் கூறியுள்ளார்.
கடலோரக் காவல் படை தினத்தையொட்டி நிருபர்களிடம் பேசிய அதன் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர்.எப்.காண்ட்ராக்டர், கடற் புலிகளின் பெயர் குறிப்பிடாமல் பேசினார். அவர் கூறியதாவது:
சேது சமுத்திரக் கால்வாயை தீவிரவாதிகள் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. மிகக் குறுகலான இந்தக் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களுக்கு இந்தப் பகுதியில் செயல்பட்டு மிகவும் தீவிரவாத இயக்கத்தால் ஆபத்துகள் விளையலாம்.
எனது இந்தக் கருத்துக்களை நான் ஏற்கனவே அரசிடம் தெரிவித்துவிட்டேன் என்றார்.
ராமர் பாலத்தை சுட்டிக் காட்டி இத் திட்டத்துக்கு எதிராக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் வழக்கு தொடர்ந்து அது நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் இப்போது கடலோரக் காவல் படை ரூபத்தில் பிரச்சனை உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்தத் திட்டத்தை கடற்படைத் தலைவர் சுரீஷ் மேத்தாவும் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் வளர்சிக்கு எதிரானவர்கள் என கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications