90 நாட்களுக்கு முன்பே ரயிலில் ரிசர்வ் செய்யும் முறை மீண்டும் அமல்
சென்னை: 90 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்யும் முறை மீண்டும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரயிலில் செல்வோர் முன்பதிவு செய்து கொள்ள விரும்புவோர், 2 மாதங்களுக்கு முன்பாகத்தான் செய்ய முடியும். அதை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாற்றி, 3 மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்யலாம் என ரயில்வே மாற்றி அறிவித்தது.
ஆனால் இந்த புதிய முறைக்கு பயணிகளிடையே கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் நிலவியது. காரணம், இந்த முறையால், பயணிகளை விட புரோக்கர்களுக்கும், ஆன்லைனில் ரிசர்வ் செய்பவர்களுக்கும்தான் சாதகமாக இருந்தது என்பதுதான்.
கால் கடுக்க வரிசையில் நின்று காத்திருந்து ரிசர்வ் செய்யும் பயணிகள் இதனால் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் 3 மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்யும் முறையை ரயில்வே ரத்து செய்து பழையபடி 2 மாதம் என்ற பழைய நடைமுறைக்கு திரும்பியது.
இந்த நிலையில் மீண்டும் 3 மாத நடைமுறைக்கு ரயில்வே திரும்பியுள்ளது. இன்று முதல் அந்த முறை அமலுக்கு வருகிறது.
மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் மாதம் இறுதியில் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த நிலையில் 3 மாத கால ரிசர்வேஷன் முறையை ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications