மாநாட்டுக்கு தடை: தமிழக அரசுக்கு நெடுமாறன் கடும் கண்டனம்
சென்னை: கடலூரில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் நாளை நடைபெறவிருந்த தமிழர் உரிமை மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் காவல்துறை தடை விதித்ததற்கு அந்த இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை (பிப்ரவரி 2ம் தேதி) கடலூரில் நடைபெற இருந்த தமிழர் உரிமை மாநாட்டிற்கு அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டன. ஆனால் வழக்கம் போல கடைசி நேரத்தில் காவல்துறை தடை விதித்துள்ளது.
ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதை கண்டித்து இந்த மாநாடு நடைபெற இருந்தது. ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் காவல்துறை நேற்றிரவு தடை விதித்துள்ளது. ஏற்கனவே பலமுறை எங்கள் மாநாடுகளுக்கு இதே போன்று தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அப்போதெல்லாம் உயர்நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் எங்கள் மாநாடுகளுக்கு அனுமதியும் அளித்துள்ளது. தற்போது மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications