திட்டமிட்ட செயல்-ஜெ மீது கருணாநிதி தாக்கு
சென்னை: சட்டசபையில் இன்று நடந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா நிதியமைச்சர் அன்பழகன் குறித்து பேசிய பேச்சு பெரும் அமளியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா பேச்சுக்கு அமைச்சர்கள், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவினர் பெரும் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
இங்கு நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல். ஜனநாயகத்தில் அதிமுகவுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தான் அவர்களது செயல் காட்டுகிறது.
ஜனநாயகத்தில் தீராத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்பதால் தான் நாம் அமைதியாக இருந்தோம். அரசை குறைகூற எதிர்க் கட்சிக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டப் பேரவையை முடக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட செயல்களை அரங்கேற்றக் கூடாது.
ஆனால், அவர்கள் திட்டம் போட்டு வந்தார்கள். நமது அரசு ஜனநாயக விரோதமானது என அதிமுக கூறுகிறது. சட்டசபையின் கோப்புகளைப் பார்த்தாலே தெரியும், யார் ஜனநாயக விரோதிகள், யார் ஜனநாயகவாதிகள் என்பது.
ஆளுநர் உரை மீது பேச திமுகவைச் சேர்ந்த 7 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் மொத்தமே 41 நிமிடங்கள் தான் பேசினர்.
ஆனால், அதிமுக தரப்பில் 10 உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தரப்பட்டது. அவர்கள் மொத்தம் மூன்றரை மணி நேரம் பேசியுள்ளனர்.
நாங்கள் சுயமரியாதைக் காரர்கள். ஆனாலும் பேராசியர் அன்பழகனைப் பார்த்து அவர்கள் தவறாகப் பேசியபோதும் அமைதி காத்திருக்கிறோம். காரணம், ஜனநாயகத்தை நாங்கள் மதிப்பது தான். ஆட்சியில் இருப்பதால் பொறுப்புடன் இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். எதிர்தரப்பும் அப்படியே நடந்து கொள்வதே நல்லது என்றார் கருணாநிதி
-
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications