பட்ஜெட்டை பார்த்துவிட்டு ஆதரவு மறுபரிசீலனை-சிபிஐ
Subscribe to Oneindia Tamil
கரூர்: பட்ஜெட் தாக்கலான பிறகு மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவு குறித்து இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு கடுமையாக இருக்கும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிரட்டி வருகிறார். இந் நிலையில் அவருக்கு இடதுசாரிகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியன்,
வரும் 29ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. அந்த பட்ஜெட் எப்படி இருக்கிறது, சாதக-பாதக அம்சங்கள் என்ன என்பதை ஆய்வு செய்வோம். அதன் பின்னர் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.
தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறோம். மக்களவைத் தேர்தலுக்குள் அந்த அணி உருவாகிவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications