ஆள் குறைப்பில் டிசிஎஸ் - 400 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது
{image-Tcs+Logo250_06022008.jpg tamil.oneindia.com}டெல்லி: முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 400 ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் ஐபிஎம், விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக ஊழியர்களின் சம்பளத்திலும், ஊக்கத் தொகையிலும் கையை வைத்தன.
தற்போது ஆள் குறைப்பில் அவை இறங்கியுள்ளன. 2 நாட்களுக்கு முன்னர் ஐபிஎம்-ல் வேலைபார்க்கும் 700 ஊழியர்களை ராஜினமா செய்யுமாறு அந்த நிறுவனம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனம் 400 ஊழியர்களை விலக உத்தரவிட்டது.
அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, பொருளாதார தடுமாற்றம் ஆகியவற்றால்தான் ஆள் குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பில் இந்திய ஐடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
இது ஆள் குறைப்பு இல்லை என்று டிசிஎஸ் தெரிவிக்கிறது. திறமை மற்றும் வேலை பார்க்கும் தன்மையைப் பொறுத்து ஆண்டுக்கு 500 பேர் விலகியபடிதான் இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.
ஐடி நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திலேயே போய் விடுகிறதாம். இதனால் இந்த நடவடிக்கையை ஐடி நிறுவனங்கள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications