கூட்டு குடிநீர் திட்டம் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றார்

Subscribe to Oneindia Tamil

MK Stalin
சென்னை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து ஜப்பான் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து ஜப்பான் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஊரக வளர்ச்சி மற்றும உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார்.

இதற்காக சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு (பிப்ரவரி 4ம் தேதி) 11-30 மணிக்கு விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்கள்.

நேற்று காலை 6 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்த ஸ்டாலின், காலை 9-50 மணிக்கு விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5-20 மணிக்கு டோக்கியோ சென்றடைந்தார்.

டோக்கியோவில் தங்கியுள்ள அமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 11-30 மணிக்கு ஜப்பான் நாட்டு வங்கி இயக்குநர் டி.சியோகுச்சியை சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் நாளை டோக்கியோ மெட்ரோ ரயில் திட்டத்தையும், புல்லட் ரயிலையும் பார்வையிடுகிறார்.

வரும் 8ம் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு டோக்கியோவில் இருந்து விமானம் மூலம் 9ம் தேதி அதிகாலை 1-30 மணிக்கு சிங்கப்பூர் வருகிறார்.

சிங்கப்பூரில் ஒரு நாள் தங்கியிருந்து பின்னர் 10ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8-30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இரவு திரும்புகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+