மதுரை நர்ஸ் தற்கொலை-சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
மதுரை: மதுரையில் நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை துவங்கியுள்ளது.
மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்த நாகேஷ். தொழிலதிபரான இவர் மு.க.அழகிரிக்கு நெருக்கமான நண்பர். இவர் தனது உடல்நிலை சரியில்லாத தாயாரை கவனித்துக் கொள்வதற்காக திருமங்கலத்தை சேர்ந்த நர்ஸ் கற்பகவல்லி என்பவரை நியமித்தார்.
அவர் நாகேஷ் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது தாயாரை பராமரித்து வந்தார். இந் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நாகேஷ் வீட்டு குளியல் அறையில் நர்ஸ் கற்பகவல்லி தூக்கில் தொங்கினார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆண்டாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு நடத்திய விசாரணையில், கற்பகவல்லி காதலில் தோல்வி அடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாக தெரிவித்தனர். இது தொடர்பாக கற்பகவ்லியின் காதலன் அலங்காநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நர்ஸ் கற்பகவல்லியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். நர்ஸ் இறந்தது குறித்த பிரச்சனை சட்டசபையிலும் எழுப்பபட்டது.
இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந் நிலையில் சிபிசிஐடி துணை எஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மாரிராஜன் தலைமையிலான போலீசார் நேற்று கற்பகவல்லியின் பெற்றோர்கள், காதலன் துரைராஜ், தொழிலதிபர் நாகேஷ் மற்றும் அவரது டிரைவர் நந்தகுமார் உள்பட சுமார் 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications