ராஜ் தாக்கரேக்கு சவால் விட்ட அமர் சிங்குக்கு கொலை மிரட்டல்
மும்பை: மராட்டிய நவ நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேக்கு சவால் விட்ட சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் ராஜ் தாக்கரே, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தாக்கி பேசியிருந்தார். இதற்கு அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், ராஜ் தாக்கரேயை எதிர்த்து பதில் அளித்திருந்தார்.
இதனால் ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்கள் மும்பையில் வன்முறையில் இறங்கினர். அங்கிருந்த உ.பி, பீகார் ஆகிய நிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் போலீசார் ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ராஜ்தாக்கரே எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் தனது அனுமதி இல்லாமல் மும்பைக்குள் நுழைய முடியாது என ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுகுறித்து அமர்சிங் மகராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் புகார் செய்தார். அதற்கு அவர், அமர்சிங் மும்பை வரும்போது தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
இந் நிலையில் மும்பை வந்த அமர்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எனது செல்போனுக்கு கொலை மிரட்டல் விடுத்து தொடர்ந்து எஸ்.எம்.எஸ். வருகிறது. இந்த மிரட்டல் விடுத்தவர்கள் பற்றி போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மும்பை காவல்துறை ஆணையரை எதிர்த்து கெரோ செய்வேன்.
மும்பை போலீஸ் கமிஷ்னர் தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜ் தாக்கரேயை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். போலீஸ் கமிஷ்னரும், துணை கமிஷ்னரும் ராஜ் தாக்கரேக்கு சல்யூட் அடிக்கிறார்கள்.
சமாஜ்வாடி கட்சி மராட்டியர்களுக்கு எதிரானது அல்ல. சத் பூஜா உட்பட மராட்டியர்களின் பல்வேறு விழாக்களையும் எங்கள் கட்சி கொண்டாடுகிறது. மும்பையில் தாக்கப்பட்ட சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுக்கு மொத்தம் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை. அதற்கு அவர் முக்கியத்துவமும் அளிக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்ட மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு நன்றி.
அதே நேரத்தில் மாநில அரசு வட மாநிலத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராஜ் தாக்கரேயை பாதுகாக்கிறது என்றார் அமர்சிங்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications