முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் மரணம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தொகுதி முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் புற்று நோயால் மரணமடைந்தார்.
77 வயதாகும் ஹேமச்சந்திரன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் நாகர்கோவில் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மாவட்ட சிஐடியூ அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே கடைசிக் காலம் வரை வாழ்ந்த ஹேமச்சந்திரன், திருவட்டார் தொகுதி எம்.எல்.ஏவாக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவட்டார் மீட்புப் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
மிகவும் எளிமையான ஹேமச்சந்திரன் தொண்டர்களோடு தொண்டர்களாக வாழ்ந்தவர். அவரது மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications