உலக பொருளாதார தேக்கத்தால் சாப்ட்வேர்துறைக்கு பாதிப்பில்லை-டிசிஎஸ்
ஹைதராபாத்: அமெரிக்க உள்பட உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கத்தால் இந்திய சாப்ட்வேர் துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) தலைவர் ராமதுரை கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் டிசிஎஸ் தனது இரண்டாவது கிளையை துவக்கியுள்ளது.
சினர்ஜி பார்க்கில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கிளையில் 8,000 பேர் பணியாற்றவுள்ளனர். இதன் முதல் பிரிவு செயல்பட ஆரம்பித்துவிட்டது. இன்னொரு பிரிவு ஏப்ரலில் செயல்பாட்டுக்கு வரும்.
இந் நிலையில் இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதுரை, பொருதார தேக்கம் குறித்து கவலைகள் எழுந்துள்ளது உண்மை. ஆனால், அதனால் சாப்ட்வேர் துறைக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. எல்லாம் வழக்கம்போலவே உள்ளது.
பொருளாதார தேக்கத்தால் வருமானம் குறைந்து 500 பேரை டிசஎஸ் வேலை நீக்கம் செய்துவிட்டதாக கூறப்படுவது தவறு. இது வழக்கமாக நடப்பது தான். பணியில் திறமை இல்லாதவர்களை நீக்குவது வழக்குமே. மாதந்தோறும் 40 முதல் 50 பேர் அவ்வாறு வெளியேறுவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
ஆனால், அதை மீடியா தான் வேறு மாதிரியாக ஊதி பெரிதாக்கிவிட்டது. 22,000 பிரஷ்ஷர்களுக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளோம். இதில் 4,000 பேர் ஹைதராபாத்தில் பணியாற்றுகின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications
