நெல்லையில் புதிய தமிழகம் பேனர் கிழிப்பு-பதட்டம்
நெல்லை:நெல்லையில் புதிய தமிழகம் கட்சியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் தேமுதிக பேனரில் இடம்பெற்றிருந்த எம்ஜிஆர் படத்தை அதிமுகவினர் கிழித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு வருகிற 24ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதற்காக நெல்லை ஜங்ஷன் பகுதியில் அக்கட்சியின் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை ஜங்ஷன் அண்ணாசிலை அருகே புதிய தமிழகம் கட்சியின் மாநகர அமைப்பாளர் கண்மணி மாவீரன் தனது படத்துடன் கூடிய பேனர்களை வைததுள்ளார்.
இந்நிலையில் யாரோ மர்ம நபர்கள் சிலர் அந்த பேனரில் இருந்த கண்மணி மாவீரன் படத்தை பிளேடால் கிழித்து எறிந்துள்ளனர். இது குறித்து அவர் ஜங்ஷன் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பேனரை கிழித்தவர்களை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications