வருகிறது 'கேப்டன்' டிவி!

கடந்த 15 ஆண்டுகளாக விஜயகாந்த் ஒரு விரதம் இருந்து வருகிறார். அது எந்த டிவிக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்பது. இந்த விரத்தை தவறாமல் கடைப்பிடித்து வரும் விஜயகாந்த், தேமுதிகவைத் தொடங்கிய பின்னர், தனது கட்சி செய்திகளை எந்த டிவியும் சரிவர தருவதில்லை என்று டிவிக்கள் மீது பாய்ந்தார்.
இந்த நிலையில் தனது கட்சிக்கென தனியாக ஒரு டிவி சானலை தொடங்க முடிவு செய்து விட்டாராம் கேப்டன்.
தமிழ்ப்புத்தாண்டு முதல் (தை முதல் நாளை அரசு தமிழ்ப் புத்தாண்டு என்று கூறினாலும் கூட விஜயகாந்த் வழக்கம் போல ஏப்ரல் 14ம் தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப் போவதாக கூறுகிறார்) இந்த புதிய டிவி உதயமாகும் என்று தெரிகிறது.
இதுதவிர முழுக்க முழுக்க அரசியல்மயமான பத்திரிக்கையையும் அவர் தொடங்கவிருக்கிறார்.
நமக்கென ஒரு டிவி இருந்தால் நமது கொள்கைகளையும், பேட்டிகளையும், கருத்துக்களையும், பேச்சுக்களையும் தங்கு தடையின்றி, எடிட்டிங் இன்றி நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறாராம் விஜயகாந்த். அதனால்தான் இந்த புதிய டிவி குறித்த சிந்தனைக்கு அவர் வந்துள்ளார்.
டிவிக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. இதுவரை அதுகுறித்து கேப்டன் தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரியவில்லை.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications