ஷார்ஜாவில் இந்திய வர்த்தக மையம்
துபாய்: இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே வர்த்தக தொடர்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில், ஷார்ஜாவில் 50 லட்சம் டாலர் செலவில், இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
இங்கு இந்திய வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களின் நிரந்தர கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே இப்படி ஒரு நிரந்தர வர்த்தக மையம் அமைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தின் மூலம் இந்தியாவை பொருளாதார சக்தியாக்கும் முயற்சிக்கு மேலும் வலு சேரும்.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில், ஷார்ஜாவில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில் கவுன்சில் (ஐபிபிசி) மற்றும் ஷார்ஜா வர்த்தக சபையும் நேற்று கையெழுத்திட்டன.
ஷார்ஜா வர்த்தக சபை சார்பில் அகம்மது முகம்மது அல் மிட்பாவும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் சுதேஷ் அகர்வாலும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வின்போது இந்தியத் தூதர் வேணு ராஜாமணி, ஐபிபிசி துணைத் தலைவர் கே.வி. சம்சுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த வர்த்தக மையத்திற்குத் தேவையான நிலத்தை ஷார்ஜா அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் ஷேக் சுல்தான் பில் முகம்மது அல் குவாசிமி பிறப்பித்துள்ளார். இந்த மையத்தை நிறுவி நிர்வகிக்கும் பொறுப்பு ஐபிபிசியிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறித்து இந்திய அரசு யோசனை தெரிவித்தது. இதை ஷார்ஜா வர்த்தக சபை ஏற்றுக் கொண்டு இதற்கான முயற்சிகளை எடுத்தது.
20 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள இந்த மையத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2 மேல் தளங்களுடன் கூடிய கட்டடம் எழுப்பப்படும். மொத்த கட்டுமான பரப்பளவு 50 ஆயிரம் சதுர அடியாக இருக்கும். இதைக் கட்டி முடிக்க தோராயமாக 50 லட்சம் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு ஆடிட்டோரியம், இந்திய ஹோட்டல் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிவடையும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications