தேமுதிக பேனரில் எம்ஜிஆர் படம் கிழிப்பு-அனிதா மீது வழக்கு
ஆறுமுகநேரி: காயல்பட்டிணத்தில் தேமுதிகவினரின் டிஜிட்டல் பேனரில் எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உடன்குடியில் கடந்த நாட்களுக்கு முன்பு அதிமுக பொது கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடும் உரிமை அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. அதிமுக அல்லாத யாரும் எம்ஜிஆர் படத்தை போட கூடாது. போடும் தகுதியும் அவர்களுக்கு கிடையாது. அவ்வாறு யாராவது எம்ஜிஆர் படத்தை போட்டு தட்டி போர்டோ, டிஜிட்டல் பேனரே வைத்தால் அதில் எம்ஜிஆர் படத்தை அதிமுகவினர் கிழித்தெறியலாம். அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி போஸ்டர்களில் உள்ள எம்ஜிஆர் படத்தை கிழிக்கும்போது போலீசார் என் மீது வழககு போடலாம் என்று சவால் விட்டார்.
இந்நிலையில் தேமுதிக மாநில பொறியாளர் அணி செயலாளர் சீனிவாசக ராகவன் திருமணத்திற்காக கோவில்பட்டி வந்த விஜயகாந்தை வரவேற்கும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் எம்ஜிஆர் படம் மட்டும் கடந்த 7ம் தேதி நள்ளிரவு கிழிக்கப்பட்டது. இதைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் மாவட்ட தேமுதிக செயலாளர் கோமதி கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தேமுதிக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கோமதி கணேசன், திருச்செந்தூர் ஓன்றிய செயலாளர் செந்தில்குமார், ஓன்றிய தலைவர் ஊர்ச்செல்வன் ஆகியோர் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகாரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தேமுதிக பேனரை கிழித்ததாக குறிப்பிட்டுருந்தனர். இப்புகாருக்கு ஆதரவாக அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு விவரத்தையும் இணைத்திருந்தனர்.
இதுகுறித்த சம்பவம் நடைபெற்ற பின்னர் 5 நாட்கள் கழித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேமுதிக பேனரை கிழித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications