சென்னைக்கு மேலும் 250 பஸ்கள்
சென்னை: சென்னை நகரில் இன்னும் ஒரு மாதத்தில் கூடுதலாக 250 பஸ்கள் இயக்கப்படும் என
போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் 200வது திமுக இளைஞர் அணி தொடக்க விழாவில் நேரு பேசுகையில்,
அமைச்சர் ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று இளைஞர் அணியை உருவாக்கினார். அவரது கால்படாத கிராமங்களே இல்லை. ஒரே பகுதியில் 200 இளைஞர் அணியை உருவாக்கி இருப்பது சாதாரண விசயமல்ல.
இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரும் இயக்கமாக திமுக திகழ்கிறது. இந்த இயக்கத்தை நம்பியவர்கள் யாரும் வீண் போனதில்லை. திமுகவை ஒழிக்க சில கட்சிகள் கங்கனம் கட்டி பார்க்கின்றன.
நடுத்தர, பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு திமுக ஆட்சியில்தான் கிடைத்தது, தொடர்ந்து கிடைக்கும்.
சென்னை நகரில் 2,875 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியில் 1,800 பஸ்கள் மட்டுமே இயக்கினார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2,550 பஸ்கள் இயக்கப்பட்டுவிட்டன. நிறுத்தப்பட்ட அனைத்து வழித் தடங்களிலும் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்னும் 30 நாட்களுக்குள் நகரில் கூடுதலாக 250 பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் சிலர், வடபழனியில் இருந்து புறப்படும் 5இ பஸ்சை கோயம்பேடு வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று இன்று முதலே அந்த பஸ் கோயம்பேடு வரை இயக்கப்படும் என நேரு அறிவித்தார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications