தமிழகத்தில் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்
நெல்லை: தமிழகத்தில் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க தற்காலிக ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் எல்காட் சார்பில் 500 ஏக்கர் பரப்பில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதில் 100 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை சிறப்பு பொருளாதார மேம்பாட்டு ஆணையர் விஜயன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கங்கைகொண்டானில் 100 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தற்காலிக சிறப்பு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை நாங்கள் பார்வையிட்டு மண்டலம் அமைக்க இந்த நிலம் தகுதியானதுதானா என்பது குறித்து ஆய்வு செயதுள்ளோம். நிலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா, தனியார் பாதை நிலத்தின் வழியே ஏதாவது செல்கிறதா என்பது குறித்தும் நில வரைபடங்களுடன் ஆய்வு செய்தோம்.
இதுகுறித்த முழு தகவலையும் ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். நிலத்திற்குரிய ஆவணங்கள் அனைத்தும் இங்கு உள்ளது. நாஙகுநேரியிலும் 1,000 ஹெக்டர் பரப்பளவில் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது.இம்மண்டலம் குறித்த அறிக்கை மூன்று வாரங்களில் தயார் செய்வோம்.
தமிழகத்தில் மொத்தம் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க தற்காலிக ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மண்டலம் பாண்டிசேரியில் அமையவுள்ளது.
27 மண்டலங்களில் ஆய்வு செய்து முறையான அறிவிப்பை வெளியிட்டு விட்டோம். மற்ற இடங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 14 மண்டலங்களில் ஆய்வு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆறு மாதக்காலத்திற்குள் இப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications