குணாலைக் கொன்றது நில புரோக்கர் கும்பல்?
காதலர் தினம் பட நாயகன் குணால் சிங், மும்பையில் உள்ள தனது வீட்டில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது காதலியும், குணால் நடிக்கவிருந்த புதிய இந்திப் படத்தின் நாயகியுமான லவீனா மட்டும் இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தற்கொலை அல்ல, கொலை என்று குணாலின் தந்தை ராஜேந்திர சிங் கூறவே வழக்கு சூடுபிடித்தது.
போலீஸாரும் லவீனாவை துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ராஜேந்திர சிங். தனது மகனை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கொன்றிருக்கலாம் என்பது அவரது சந்தேகம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் குணால், சில நில புரோக்கர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். சில காலத்திற்கு முன்பு நில பேரம் ஒன்றில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார்.
எனவே அதனால் பாதிக்கப்பட்ட யாரேனும் குணாலைக் கொன்று அவரது சொத்துக்களையும் பறிக்க திட்டமிட்டிருக்கலாம்.
குணால் இறந்த சமயத்தில் லவீனா வீட்டில்தான் இருந்துள்ளார். கொலையை அவர் நேரில் பார்த்திருக்கக் கூடும். அவர் இந்த வழக்கின் முக்கிய சாட்சி ஆவார்.
லவீனான எங்களது குடும்ப நண்பரின் மகள்தான். குணால் நடிக்கவிருந்த படம் மூலம் ஹீரோயினாக அறிமுகவிருந்தார்.
எனது மகன் தற்கொலை செய்து கொண்டிருக்க காரணமே இல்லை. சம்பவத்திற்கு முதல் நாளன்று அவர் தனது மனைவி குழந்தைகளுடன் பேசியுள்ளார். தனது புதுப் படம் குறித்து சந்தோஷமாக விவாதங்களை நடத்தினார் என்று கூறியுள்ளார் ராஜேந்திர சிங்.
குணால் எப்படி இறந்தார் என்பதில் நிலவும் குழப்பம் இதுவரை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications