வக்கீல்கள் மீது தாக்குதல்-டி.எஸ்.பி. மீது வழக்கு
நெல்லை: குற்றாலத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக டிஎஸ்பி உள்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 12 பேருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளை பகுதியை சேர்ந்த சன்னியாசி மகன் வேல்சாமி. இவர் தூத்துக்குடியில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி தூத்துககுடி வக்கீல்கள் சிலர் குற்றாலத்திற்கு வந்தனர். அவர்களில் வேல்ச்சாமியும் ஒருவர்.
26ம் தேதி அதிகாலையில் இக்னேசியஸ், மார்க்ஸ், பூங்குமார், சாந்த சுரேஷ், கோமதி, மணிகண்டன் ஆகியோர் பழைய குற்றாலத்தில் குளித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருககும், வக்கீல்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இக்னேசியஸ், பூங்குமார், வேல்சாமி ஆகியோரை போலீசார் தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தென்காசி டிஎஸ்பி மயில்வாகணன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் குப்புசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகசாமி, கணபதி, ஏட்டு ராஜன், திருவேங்கடம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட 12 பேர் மீது நெல்லை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடசாமி டிஎஸ்பி மயில்வாகணன், உள்பட 12 பேரும் மார்ச் 19ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறி வர சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications