கருணாநிதி கொடுத்த பட்டா போலியா?
வேலூர்: வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீபுரம், தங்கக் கோவிலுக்கு எதிரே உள்ள அரியூர் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2000மாவது ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது கையால் கொடுக்கப்பட் மனைப் பட்டாக்கள் போலியானவை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருமலைக்கோடி என்ற இடத்தில் ஸ்ரீபுரம் என்கிற தங்கக் கோவில் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்தக் கோவிலுக்கு முதல்வர் கருணாநிதி விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில் இக்கோவிலுக்கு எதிராக உள்ள அரியூர் கிராம மக்கள் புதிய பிரச்சினையை சந்தித்துள்ளனர்.
அரியூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2000மாவது ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்தப் பட்டாக்கள் போலியானவை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியுள்ளதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த, இக்கிராமத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தாங்கள் முறைப்படி பட்டா நிலங்களில்தான் வசித்து வருவதாக அரியூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்து புகார் கூறினர்.
அப்போது அவர்கள் காட்டிய பட்டாக்களை பார்த்த ஆட்சித் தலைவர், இவை போலியானவை என்று கூறியுள்ளார். மேலும், அவர்கள் வசித்து வரும் இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், முதல்வராக கருணாநிதி இருந்தபோது 2000மாவது ஆண்டு இந்த பட்டாக்களை அவரது கையால்தான் பெற்றோம். இப்போது அவற்றை போலி பட்டாக்கள் என்று கூறுவது எப்படி என்று கேட்டு ஆட்சித் தலைவரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவற்றுக்கு ஆட்சித் தலைவர் சரியான பதிலைச் சொல்லவில்லை.
கருணாநிதி கையால் வாங்கிய பட்டாக்களை ஆட்சித் தலைவர் போலி பட்டாக்கள் என்று கூறியிருப்பதால் அரியூர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications