சிவனாண்டி ரயில்வேக்கு தூக்கி அடிப்பு
சென்னை: அதிமுக ஆட்சியில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் போல செயல்பட்டு ஆட்சி மாறியதும் நீண்ட காலமாக பணி வழங்கப்படாமல் சமீபத்தில் ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்ட சிவனாண்டி, இப்போது ரயில்வே டிஐஜியாக்கப்பட்டுள்ளது.
இவர் தவிர மேலும் 14 உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார்.
சென்னை குற்றப் பிரிவு ஐஜி ஜே.கே.திரிபாதி, பொருளாதார குற்றப் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஐஜி துக்கையாண்டி, சென்னை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு (சிலை திருட்டு தடுப்பு) ஐஜி பிரமோத் குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மது விலக்கு டிஐஜி மாசானமுத்து, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி (எஸ்.ஐ.டி) டிஐஜி ஆறுமுகம், சிலைத் திருட்டுப் பிரிவு சிஐடி பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஆயுதப் படை டிஐஜி சிவனாண்டி, ரயில்வேக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட இணை ஆணையர் சந்ததீப் ராய் ரத்தோர், தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை போக்குவரத்து துணை ஆணையர் மனோகரன், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி முதல்வராக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இதுவரை இருந்த வனிதா, சென்னை தலைமையிட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் அமலாக்கப் பிரிவு எஸ்பி ஆகியுள்ளார் கல்பனா நாயக்.
சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ராஜேஸ்வரி மாற்றப்பட்டு திருட்டு வீடியோ தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாகியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் விஜயகுமாரி, மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்











Click it and Unblock the Notifications