ரவுடி டாக் ரவி குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: மதுரையின் பிரபல ரவுடி டாக் ரவி மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவன் ரவிக்குமார் என்கிற டாக் ரவி. இவன் 1998ம் ஆண்டு எஸ்.எஸ். காலனியை சேர்ந்த ரவுடி ஆட்டோ சுந்தரையும், 1999ம் ஆண்டில் ரவுடி அழகர் என்பவனின் தம்பி இளங்கோவனையும் கொலை செய்தான்.
திலகர் திடலை சேர்ந்த சுசிலா என்ற பெண்ணியிடம் நகைகளை கொள்ளை அடித்ததோடு அவரையும் கொலை செய்தான். மேலும் இவன் மீது கார் திருட்டு, கத்தியை காட்டி வழிப்பறி செய்தல், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவை கொலை செய்த குற்றவாளி பாஸ்கரனுக்கு அடைக்கலம் கொடுத்தது என தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.
இந் நிலையில் டாக் ரவியை என்கவுண்டரில் போட்டுத் தள்ள போலீசார் முடிவு செய்தனர். இதை அறிந்த ரவி தானாகவே போலீசில் சரணடைந்தான். அவனை திருமங்கலம் போலீசார் சிறையில் அடைந்தனர்.
அவனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்குமாறு மதுரை கமிஷனர் நந்தபாலன் உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி டாக் ரவி குண்டாசில் அடைக்கப்பட்டுள்ளான். இதனால் அவனால் ஓராண்டுக்கு ஜாமீன் பெற முடியாது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications