திமுகவில் இணைகிறது போட்டி மதிமுக!
கரூர்: எல்.கணேசன்-செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான போட்டி மதிமுக, விரைவில் திமுகவில் ஐக்கியமாகப் போகிறது.
கரூரில் போட்டி மதிமுக சார்பில் சேது சமுத்திர திட்டத்தை வலியுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி.ராமசந்திரன், அவைத் தலைவர் எல்.கணேசன் ஆகியோர் கூறியதாவது:
இன்று அரசியலில் இரு அணிகள் உருவாகியுள்ளன. ஒன்று மதவாத அணி. மற்றொன்று மதசார்பற்ற அணி. மதவாத அணிக்கு பாஜக தலைமை வகிக்கிறது. அதற்கு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமை வகிக்கிறார். இதில் ஒரு துரதிஷ்டம் என்ன வென்றால் திராவிட பாரம்பரியம் என்று கூறிக் கொள்ளும் வைகோ அந்த அணியில் உள்ளார் என்பது தான்.
மத சார்பற்ற அணிக்கு தமிழகத்தில் கலைஞர் தலைமை வகிக்கிறார். அந்த அணியில் நாங்கள் உள்ளோம். தன்னை உதைத்த காலுக்கு முத்திமிடுகிறார் வைகோ. ஆனால் நாங்கள் மதிப்பவருடன் கரம் குலுக்கியுள்ளோம்.
திமுகவில் (போட்டி) மதிமுகவை இணைக்க உரிய தருணம் எதிர் நோக்கியுள்ளோம். விரைவில் இணையும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நாள், நேரம் பின்பு அறிவிக்கப்படும்.
எந்த கொள்கைக்காக மதிமுக உருவாக்கப்பட்டதோ அதை வைகோ அழித்து விட்டார். வைகோ தலைமையில் இருப்பவர்கள் விரைவில் எங்கள் தலைமையில் எங்களுடன் வந்து திமுகவில் இணைந்து விடும் காலம் நெருங்கி வருகிறது என்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications