இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 40 மூடை பீடிக் கட்டுகள் பறிமுதல்
ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 40 மூடை பீடிகளை போலீஸார் பறிமதுல் செய்து இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே நாச்சியூரணி என்ற கடலோரக் கிராமத்தில் பீடிக் கட்டுக்களை சிலர் இலங்கைக்கு கடத்துவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாச்சியூரணி கடல் பகுதியில் சிலர் பைபர் கிளாஸ் படகில் சில மூடைகளை ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து விரைந்து வந்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அதில் பீடிக் கட்டுக்கள் இருந்தன. மொத்தம் 40 மூடை பீடிக் கட்டுக்கள் இருந்தன. இவற்றை இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றியதாக அங்கிருந்த 3 பேரும் கூறினர். இதையடுத்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி, நாச்சியூரணியைச் சேர்ந்த கருப்பையா, அய்யாச்சாமி ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
படகு உரிமையாளர் தப்பி ஓடி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications