திருச்செந்தூரில் தேரோட்டம்-லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் பாத யாத்திரையாக திருச்செந்தூர் வந்தனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. முதலாவதாக விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அது 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்த பின் சுவாமி தேர் இழுக்கப்பட்டது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா கோஷங்களுடன் திரளான பக்தர்கள் தேரை இழுத்தனர். இந்தத் தேர் நிலைக்கு வந்த பின் அம்மன் தேர் இழுக்கப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் திருச்செந்தூருக்கு இய்கப்பட்டன.
நாளை (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.
மறுதினம் சுவாமி-அம்பாள் பூந்தேர் சப்பரத்தில் திருவீதி உலாவுடன் மாசித் திருவிழா நிறைவடைகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications