தலித் கிருஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது-பாஜக
விஜயவாடா: பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள சச்சார் கமிட்டி அறிக்கையை வங்கக் கடலில் தூக்கி எறிவோம் என பாஜக மூத்த தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நிருபர்களிடம் பேசிய நாயுடு,
சமீபத்தில் சச்சார் கமிட்டி மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை பாஜக ஆதரிக்காது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மத மாற்றத்தை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் சச்சார் கமிட்டியின் இந்த அறிக்கையை வங்கக் கடலில் தூக்கி எறிவோம்.
இதே போல் மத மாற்றத்திற்காக வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை தடை செய்வோம். மத மாற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
தீவிரவாதத்தை தடுக்கத் தான் பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. அச்சட்டத்தை வாபஸ் பெற்றது தவறு. அதை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும்.
காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. எனவே இன்னும் 6 மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வருவது உறுதி.
பாஜக தொண்டர்கள் இப்போதே தேர்தலுக்கு தயாராகலாம். ஒற்றுமையுடன் செயல்பட்டால் எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications