For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய்: 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' நூல் அறிமுக விழா

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் வளைகுடா சமூகப் பேரவை (Gulf Social Forum) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச் சோலையின் 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' (Crime Against Humanity) எனும் நூலை நாளை வெளியிடுகிறது.

இந்த நூலின் அறிமுக விழா நாளை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற இருக்கிறது.

நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேச இருக்கிறார்.

KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மான் நூலை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தமிழகத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 என்ற தொலைபேசி எண்கள் அல்லது [email protected] என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

ரத்ததான முகாம்:

முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை துபாயில் ரத்த தான முகாம் நடைபெறுகிறது.

நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை துபாய் அல் வாசல் மருத்துவமனையில் இந்த ரத்த தான முகாம் நடக்கிறது.

இம்முகாமில் கலந்து கொண்டு உயிர் காப்பதற்கு இன்றியமையாத் தேவையான ரத்தத்தை தானமாக கொடுக்க முன்வரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு எண்: 04 2732087 / 050 385 19 29

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X