அமெரிக்க செயற்கைக்கோளை தாக்கி சிதறடித்தது ஏவுகணை

மேற்கு பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த யுஎஸ்எஸ் லேக் எர்ரீ என்ற போர்க் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
வழக்கமாக காலாவதியான செயற்கைக் கோள்கள் விண்ணிலிருந்து பூமிக்குள் விழும்போது வளி மண்டலத்தில் ஏற்படும் காற்றின் உராய்வினால் எரிந்து, சிதறி, தூள் தூளாகி பூமிக்குள் பல நூறு கி.மீ. பரப்பளவில் சிதறி விழும்.
ஆனால், இந்த செயற்கைக் கோளில் செலவாகாமல் இருந்த ஹைட்ரசீன் என்ற மிகுந்த விஷத் தன்மை கொண்ட ராக்கெட் எரிபொருள் தான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
5,000 பவுண்ட் எடை கொண்ட இந்த செயற்கைக் கோளில் 450 கிலோ ஹைட்ரசீன் இருந்தது. இந்த ஹைட்ரசீன் மக்கள் வசிக்கும் பகுதியில் சிதறினால் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் செயற்கைக் கோளை வானிலேயே சிதறடிக்க அமெரிக்கா திட்டமிட்டது.
ஆனால், ஏவுகணையை வானில் சிதறடிக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ரஷ்யா, சீனா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது செயற்கைக் கோள்களுக்கு எதிரான ஏவுகணை திட்டத்தை மற்ற நாடுகளும் உருவாக்க வழி வகுத்துவிடும் என அந்த நாடுகள் கூறுகின்றன (இத்தனைக்கும் சீனா ஏற்கனவே இந்த சோதனையை ஒரு முறை வெற்றிகரமாக நடத்திவிட்டது. வானில் அது தன் செயற்கைக்க ேகாளை ஏவுகணையால் தாக்கி உடைத்தது. அந்த துண்டுகள் இன்னும் கூட வானில் சுற்றியபடி மற்ற செயற்கைக் கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன).
முன்னதாக வரும் 29ம் தேதிக்குள் அமெரிக்கா இந்த செயற்கைக் கோளை வானிலேயே உடைத்தெறிய வேண்டும் என்ற நிலை இருந்தது. காரணம், அந்த தினத்தில் தான் செயற்கைக் கோள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைய இருந்தது.
ஆனால், அமெரிக்காவின் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் விண்வெளி மையத்துக்கு சென்றிருந்ததால், கடந்த வாரங்களில் இந்த முயற்சியை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை. உடையும் செயற்கைக் கோளின் துகள்கள் அட்லாண்டிஸை தாக்கலாம் என்பதால் பணியை ஒத்தி வைத்திருந்தது. இந் நிலையில் நேற்று அட்லாண்டிஸ் புளோரிடாவில் தரையிறங்கிவிட்டது.
இதனால் இன்று செயற்கைக்க ேகாளை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டது. ஏவுகணையை மிகத் துல்லியமாக ஏவப்பட்டால் மட்டுமே முதல் தாக்குதலிலேயே அதை அழிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இல்லாவிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை வரும் 29ம் தேதி வரை செலுத்த இருந்தனர் கடற்படையினர்.
ஆனால், இன்று ஏவப்பட்ட முதல் ஏவுகணையே செயற்கைக்க கோளை சுமார் 133 மைல் உயரத்தில் தகர்த்து எறிந்துவிட்டது. இதற்கு எஸ்எம்-3 என்ற ஏவுகணை பயன்படுத்தப்பட்டது.
செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே செயற்கைக் கோளை ஏவுகணை காலி செய்துவிட்டது. ஆனால், அதன் ஹைட்ரசீன் கொண்ட அதன் எரிபொருள் டாங்க் முழுமையாக உடைந்துவிட்டதா என்பதை அறிய ஒரு நாள் பிடிக்குமாம்.
ஆனாலும் செயற்கைக் கோளை ஏவுகணை தக்கியபோது பெரும் வெடிப்பு சம்பவம் நடந்தது என்பதால் எரிபொருள் டேங்கும் சிதறடிக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்தப்பட்டபோது மேற்கு பசிபிக் கடலில் மற்ற கப்பல்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
பிரச்சனையை ஏற்படுத்திய இந்த செயற்கைக் கோள் குறித்த முழு விவரத்தையும் அமெரிக்கா வெளியில் சொல்லவில்லை. இது ஒரு உளவு செயற்கைக் கோள் என்பதால் ஆழ்ந்த அமைதி காத்து வருகிறது.
ஆனாலும் மற்ற நாடுகளால் யுஎஸ்ஏ-193 என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக் கோள் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்டா ரக ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பெர்க் விமானப் படைத் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இது ஏவப்பட்ட சில மணி நேரங்களிலேயே தனது ரேடியோ தொடர்பை இழந்துவிட்டது.
இதனால் அதை தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. சும்மா சுற்றியபடி உள்ள இந்த செயற்கைக் கோள் பூமியின் ஈர்ப்பு விசையால் உள் இழுக்கப்பட்டு, பூமிக்குள் நுழைய இருந்தது.
ரேடியோ தொடர்பு இருந்திருந்தால், அதை பூமிக்குள் நுழைய விடாமல் வானிலேயே நிலைப்படுத்தியிருக்கவோ, வேறு திசையில் பறக்கவோ செய்திருக்க முடியும்.
இந்த செயற்கைக் கோள் கிட்டத்தட்ட ஒரு பஸ்சின் சைசில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த செயற்கைக் கோளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதில் ஹைட்ரசீன் உள்ளது என்பதெல்லாம் வெறும் கதை என்று சொல்லும் ரஷ்ய விஞ்ஞானிகள், இந்த செயற்கைக் கோள் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவான உளவு பார்க்கும் கருவி.
இதை அப்படியே பூமிக்குள் விழுந்தால், அதன் உடையாத பாகங்கள் மற்ற நாடுகளின் கையில் சிக்கினால், அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள் குறித்த பல ரகசியங்கள் வெளியாகிவிடும் என்பதால் தான் அதை சுட்டு சிதறடித்திருக்கிறார்கள் என்கின்றனர்.
-
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
'அவசர' ஆலோசனை.. ஹோட்டல்களைக் காப்பாற்றுமா தமிழக அரசு? நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
காலியான வீதிகள்.. விழி பிதுங்கும் தொழிலதிபர்கள்.. ஆள் இல்லாத "அமீரகம்".. கோஸ்ட் டவுன் துபாய்! -
"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட் -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
உலகையே திரும்பி பார்க்க வைத்த.. 'மிஸ்டரி' போன் கால்.. புடினிடம் போனை போட்ட கெஞ்சிய டிரம்ப்? -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
ஈரான் போருக்கும்.. LPG சிலிண்டருக்கும் என்ன தொடர்பு? எப்படி தட்டுப்பாடு வந்தது? சிக்கலின் ஆதி புள்ளி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
நீ வேணா வந்து பாரு..1 லிட்டர கூட எடுத்துட்டு போக முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட ஈரான்! போச்சு -
ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு! ஈரான் புதிய தலைவர் சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications