விஜயகாந்த், குமுதத்துக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமுதம் வார இதழில் தன்னைப் பற்றி விஷமத்தனமான தகவல்களைத் தந்து பேட்டி அளித்தது தொடர்பாக தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்துக்கு முதல்வர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விஜயகாந்த் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி குறித்து கடுமையான கருத்துக்களைக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் விஜயகாந்த், குமுதம் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், மிகுந்த உள்நோக்கத்தோடும், விஷமத்தனத்தோடும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் குமுதம் இதழுக்குப் பேட்டி அளித்துள்ளீர்கள்.

உங்களது குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமும், அடிப்படையும் இல்லை. எனவே இந்த அவதூறான கருத்துக்களை உடனடியாக நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் உங்கள் மீது சட்டப்பூர்வமாக அவதூறு நடவடிக்ைக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல குமுதம் இதழ் விஜயகாந்த் பேட்டியை வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் வரை அவர்களுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+