நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: ராமதாஸ்

சமீபத்தில் விஜய்காந்த் அளித்த பேட்டியில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் சாதி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டோம் என்றும் கூறியிந்தார்.
மேலும் ஊழல், சாதி, மதத்தை சார்ந்த கட்சிகளுடன் சேர மாட்டோம் என்றார்.
இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த செயற்குழுவில் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.
நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.
அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.
புதுச்சேரியில் நடைபெற்ற செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்க்கமான முடிவுகளில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் இந்த முடிவுகளில் இருந்து விலகி செல்லமாட்டோம்.
இது ஒருபுறம் இருக்கையில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கட்சிகளை போன்றதல்ல பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழர்கள் அனைவராலும் அனைத்து தரப்பு மக்களாலும் ஆதரித்து அரவணைக்கப்படும் மாபெரும் அரசியல் இயக்கமாக பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து நிற்கிறது.
இந்த வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள், இக்கட்சியை சாதி கட்சி என்று முத்திரை குத்துவதற்கு இதுவரையில் படாதபாடுபட்டு அதில் தோற்றுப்போய் இருக்கின்றன என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications