சென்னையில் ரூ. 4,500 கோடியில் ரெனால்ட்-நிஸ்ஸான் புதிய கார் தொழிற்சாலை
சென்னை: சென்னை அருகே ரூ. 4500 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை அருகே ஓரகடத்தில், பிரான்ஸின் ரெனால்ட் மற்றும் ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனத்தினரால் ஒருங்கிணைந்த மோட்டார் வாகனத் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. ரூ. 4500 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை தொடங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் நிறுவனங்களுக்கு தலா 50 சதவீத பங்குகள் இருக்கும். ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் இங்கு தயாரிக்கப்படும்.
இந்த நிறுவனத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
புதிய கார் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் முதல்வர்க கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் ரெனால்ட் செயல் துணைத் தலைவர் பாட்ரிக் பெலாட்டாவும், நிஸ்ஸான் செயல் துணைத் தலைவர் கார்லோஸ் டாவரேஸும் கையெழுத்திட்டனர்.
முதலில் ரெனால்ட், நிஸ்ஸானுடன் இந்தியாவின் மகிந்திரா அண்ட் மகிந்திராவும் இணைந்து செயல்படுவதாக இருந்தது. ஆனால் திடீரென மகிந்திரா விலகிக் கொண்டது.
சென்னையில் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்குப்பதில் புனே அருகே சக்கான் என்ற இடத்தில் ஆரம்பிக்க மகிந்திரா வலியுறுத்தியது. ஆனால் அதை ரெனால்ட்டும், நிஸ்ஸானும் ஏற்கவில்லை. இதையடுத்து மகிந்திரா விலகிக் கொண்டது.
ரெனால்ட்டுடன் இணைந்து மகிந்திரா தற்போது செடான் லோகன் வாகனத்தை தயாரித்து விற்பனை செய்து வருவது நினைவிருக்கலாம்.
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள ரெனால்ட் - நிஸ்ஸான் தொழிற்சாலை 2010ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!











Click it and Unblock the Notifications