இழப்பீடு குழப்பம்-தேனி கலெக்டர் அதிரடி 'டிரான்ஸ்பர்'
தேனி: தேனியில் இழப்பீடு வழங்காத கலெக்டர் அலுவலகம் மீண்டும் ஜப்தி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ள அரசு, தேனி மாவட்ட கலெக்டரை அதிரடியாக டிரான்ஸ்பர் செய்துள்ளது.
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே ஆதி திராவிடர்களுக்கு வீடு கட்டும் பணிக்காக 11.55 ஏக்கர் நிலம் 1982 ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகை கேட்டு நில உரிமையாளர்கள் பெரியகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதை விசாரித்த நீதிமன்றம்,கூடுதல் தொகையை தரும்படி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்தத் தொகையைத் தரவில்லை.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, நில உரிமையாளர்களுக்கு ரூ. 77 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதற்கும் செவி சாய்க்கவில்லை.
இதனால் நில உரிமையாளர்கள் மீண்டும் பெரியகுளம் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும், மற்றும் அசையாத சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிபதி தங்கபாலா உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் முன்னிலையில் கோர்ட் அமீனாக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையில் உள்ள அசையும் மற்றும் அசையாத சொத்துக்களையும், கலெக்டரின் நேர் முக உதவியாளர் அலுவலகத்தில் உள்ள சொத்துக்களில் உள்ள 26 பொருட்களையும் நேற்று ஜப்தி செய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் குழு இழப்பீடு வழங்க உறுதி மொழி கொடுத்ததையடுத்து கோர்ட் அமீனாக்கள் ஜப்தி செய்த பொருட்களை அங்கேயே விட்டு விட்டு சென்றனர்.
ஆனால், உறுதியளித்தபடி இழப்பீடு வழங்கும் பணியை மாவட்ட நிர்வாகம் செய்யாததால் நேற்று மீண்டும் தேனி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற அமீனா, மற்றும் ஊழியர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதை முன்கூட்டியே அறிந்த மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஒ.
அலுவலகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டி வைக்கப்பட்டன.
மேலும் நீதிமன்ற ஊழியர்களை, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சமாதானப்படுத்த முயன்றர். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்ற அமீனா பல்வேறு பொருட்களை ஜப்தி செய்தார்.
ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக வரும் 27ம் தேதி அன்று பெரியகுளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையும் செயலின்மையுமே இந்த அசிங்கத்துக்கு காரணம் என்று கருதிய அரசு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹர்சஹாய் மீனாவை அதிரடியாக இடமாற்றம் செய்யதுள்ளது.
சென்னை தலைமைச் செயலக மண்டல அதிகாரியாக அவர் நியமி்க்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சுன்சோனகம் ஜடக் சிரு தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டருக்கு எதிராக ஊனமுற்றோர்...:
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து கண்பார்வை அற்றோர், காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 26 ம் தேதி அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்பார்வை அற்றோர், காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் ஆகியோருக்கு அரசு வேலையில் உரிய முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.
இது குறித்து ஊனமுற்றோர் சங்கத் தலைவர் குருராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கண்பார்வை அற்றவர், காதுகேளாதவர், வாய்பேச முடியாதவர்களுக்கு தமிழக அரசு வேலையில் முன்னுரிமை கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரம் உயர வழி செய்துள்ளது.
ஆனால் ராமநாதபுரதம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எங்களைப் போன்றவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இது வருந்ததக்க செயல்.
இந்த போக்கை கண்டித்தும், அரசு பணியில் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும் வரும் பிப்ரவரி 26 ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க












Click it and Unblock the Notifications