சென்னையில் ரூ.2.5 கோடி கேட்டமைன் பறிமுதல் - ஒருவர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்டமைன் ஹைட்ரோகுளோரைட் பவுடரை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 2.5 கோடி மதிப்புள்ள 25 கிலோ கேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக முகம்மது நாசர் என்ற பயணி வந்தார். அவரது உடமைகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அதில் தடை செய்யப்பட்ட கேட்டமைன் ஹைட்ரோகுளோரைடு பவுடர் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 25 கிலோ கேட்டமைன் அதில் இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 2.5 கோடியாகும்.
இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் நாசர் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முறையான ஆவணங்கள் இன்றி கேட்டமனை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இது போதை ஏற்றும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் இதை பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
பொதுவாக கேட்டமைன், விலங்குகளுக்கு மயக்கம் ஏற்படுத்துவதற்காக ஊசி மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் போதைப் பொருளாக மாறி விடும் என்பதால் போதைக்காக சிலர் இதை பயன்படுத்துகின்றனர்.
சென்னையில் பெருமளவில் கேட்டமனைப் போதைப் பொருளாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து கேட்டமைன் வேட்டையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக அடிக்கடி கேட்டமைன் கடத்தல்காரர்கள் பிடிபட்டு வருகிறார்கள். கடந்த 2 வாரங்களில் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் 50 கிலோ கேட்டமைன் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications