ராமதாசின் மது ஒழிப்பு பிரசார பயணம் தொடக்கம்
தூத்துக்குடி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மது ஒழிப்பு பிரசார பயணத்தை தூத்துக்குடியில் துவக்கினார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இந்த பயணத்தை மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் துவக்கி வைத்தார்.
மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து வரும் ராமதாஸ், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை வேனில் ஊர், ஊராக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
மது ஒழிப்பு ஊர்தி பயணம் என்ற பெயரில் இந்த பிரசார பயணம் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் பொதுக் கூட்டத்துடன் தொடங்கியது.
அதில் ராமதாஸ் பேசுகையில்,
1967ம் ஆண்டு நான் டாக்டராக பணியாற்றியபோது மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் ஒரு துளி கூட இல்லாமல் செய்ய முடியும். இதற்கு போலீசுக்கு சம்பளத்தை அதிகரித்தும், விரைவாக பதவி உயர்வும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார்கள்.
டாஸ்மாக் கடைகளை ஒழிப்பது பற்றி அரசு நல்ல முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். மது ஒரு கொடிய விஷம். ஆட்சியாளர்களே இந்த விஷத்தை தமிழக மக்களுக்கு கொடுக்காதீர். முதலில் மக்கள் மதுவை குடிப்பார்கள், பிறகு மது மக்களை குடிக்கும்.
கல்வியை தனியாருக்கு கொடுக்கும் அரசு டாஸ்மாக்கை மட்டும் ஏன் நடத்துகிறது?.
பெண்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, மதுக்கடைகள் எங்கள் பகுதியில் இருக்கக்கூடாது என்று எழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னிடம் சொல்லுங்கள் என்றார் ராமதாஸ்.
குமரி அனந்தன் பேசுகையில்,
காமராஜர் இருந்தவரை காங்கிரசார் மது விலக்குக்காக போராடி சிறை சென்றனர். அதன்பிறகு ராமதாஸ் போராடுகிறார்.
மகாத்மா காந்தி நாட்டு விடுதலைக்கு கள்ளுக்கடை மறியலை பெரிய ஆயுதமாக பயன்படுத்தினார். நாட்டின் விடுதலைக்கு மதுவிலக்கு முக்கிய ஆயுதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். மதுவிலக்குக்காக எப்போது அழைத்தாலும் நான் ஓடி வருவேன் என்றார்.
பின்னர் குமரி அனந்தன் தொடங்கி வைக்க பயணத்தை தொடங்கினார் ராமதாஸ்.
ரயில்வே: தமிழகத்துக்கு பொற்காலம்
தனது பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மதுரை வந்த
ராமதாஸ் பேசுகையில்,
முன்னர் ரயில்வே துறையில் தமிழகத்திற்கு இருண்ட காலமாக இருந்தது. ஆனால், இப்போது தமிழகத்துக்கு பொற்காலமாக உள்ளது.
ரயில்வே துறையில் பாமக மத்திய அமைச்சர் வேலு மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அவருக்கு முன் மூர்த்தியும் சிறப்பாக செயல்பட்டார். இவர்களது செயல்பாட்டால் ரயில்வே துறையைப் பொருத்த வரை தமிழக மக்களுக்கு இது பொற்காலமாக உள்ளது.
தற்போது ரயில்வே துறையில் எந்த மாநிலமும் அடையாத முன்னேற்றத்தை தமிழகம் கண்டுள்ளது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications