போற்றத்தக்க பட்ஜெட்- கருணாநிதி
சென்னை: மத்திய பட்ஜெட்டிக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய நிதியமச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை இந்திய நாட்டு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதைப் பாராட்டி மகிழ்கிறேன்.
சோனியாவுக்கு நான் எழுதிய விரிவான கடிதத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்தது உட்பட இந்த இரண்டாண்டு காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் என அமைக்கப்பட்டுள்ள நல வாரியங்கள், அவற்றால் அடையும் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கான பயன்கள் இவற்றை அந்தக் கடிதங்களோடு தொகுத்து அனுப்பியது, மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கென நலன்களையும், உதவிகளையும், சலுகைகளையும் பெருக்கிட ஓரளவு பயன்பட்டிருக்கும் என்பதில் மன நிறைவு கொள்கிறேன்.
அகில இந்தியாவிலே உள்ள விவசாயிகளுக்கும் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன்களை ரத்து செய்திருப்பது போற்றத்தக்கது, புகழத்தக்கது.
மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை வரும் நிதியாண்டில் நிறைவேற்றிடத்தக்க வண்ணம் முதல் தவணையாக 300 கோடி ரூபாய் மைய அரசின் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதும்,
ஈரோடு நகரில் விசைத்தறி தொழிலுக்காக மாபெரும் கூட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்து அதற்காக 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திப்பதும் வரவேற்புக்குரியது.
அதேபோல, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அத்தியாவசியமான துறைகளுக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான இந்த நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications