தர்மபுரி பஸ் எரிப்பு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 மாணவிகள் உயிருடன் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 23 பேர் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
தர்மபுரி அருகே, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்த பேருந்தை அதிமுகவினர் மறித்து தீ வைத்து கொளுத்தினர். இச்சம்பவத்தில் 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அதிமுகவினர் 3 பேருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தண்டனை அடைந்தவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும், மற்ற 25 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையை 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 28 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தவிர கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரும் தங்களை ஜாமீனில் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் பி.பி.நவ்லேகர், லோகேஸ்வர் சிங் பாண்டா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சுப்பிரமணிய பிரசாத் ஆஜரானார். அவர் வாதாடுகையில், குற்றம் புரிந்ததற்கான நேரடி சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாத நிலையில் சூழ்நிலைகளை சாதகமாகக் கொண்டு கீழ் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தண்டனை வழங்கி உள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தண்டனை அறிவிக்கப்பட்ட அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து 25 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து இந்த ஜாமீன் மனுக்களும் விசாரிக்கப்படும் என்றும், ஜாமீன் மனுக்கள் குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications