குடியரசு கட்சி வேட்பாளரானார் மெக்கெய்ன்: ஓஹியோ-டெக்ஸாஸில் ஹில்லாரி வெற்றி

Subscribe to Oneindia Tamil

McCain
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான கட்சி வாக்கெடுப்பில், புதிய திருப்பமாக, ஜனநாயகக் கட்சியின் பாரக் ஓபாமாவின் தொடர் வெற்றிக்கு ஹில்லாரி கிளிண்டன் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

ஓஹியோ மற்றும் டெக்ஸாஸ் மாகாணத் தேர்தலில் அவர் அபார வெற்றி பெற்றார்.

இந் நிலையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான பிரைமரி வாக்கெடுப்பில் தொடர்ந்து 12 மாகாணங்களில் வெற்றி பெற்று ஹில்லாரிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தார் ஓபாமா. ஹில்லாரி எங்கே தேறப் போகிறார் என்ற முடிவுக்கு அனைவரும் கிட்டத்தட்ட வந்து விட்டனர்.

ஆனால் ஓஹியோ மாகாணத் தேர்தலில் ஹில்லாரி அபார வெற்றி பெற்று ஓபாமா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். அதேபோல டெக்ஸாஸிலும் ஹில்லாரிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஓஹியோவில் அதிக வாக்குகள் வித்தியாசத்திலும், டெக்ஸாஸில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலும் ஹில்லாரி வென்றுள்ளார்.

இந்த இரு வெற்றிகளும் ஹில்லாரிக்கு பெரும் நம்பிக்கையூட்டியுள்ளன. வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் அவர் நிலைத்து நிற்க வழி கொடுத்துள்ளன.

இன்றைய வாக்கெடுப்பில் ஹில்லாரி தோற்றிருந்தால் போட்டியிலிருந்து அவர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஒபாமா தான் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆகியிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹில்லாரி தப்பிவிட்டார்.

இன்றைய தேர்தலுக்கு முன்பாக ஓபாமாவுக்கு 1385 பிரதிநிதி ஓட்டுக்களும், ஹில்லாரிக்கு 1276 ஓட்டுக்களும் இருந்தன. வேட்பாளராக தேர்வு பெற மொத்தம் 2025 ஓட்டுக்களைப் பெற வேண்டும்.

அடுத்து வியோமிஙங், மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 22ம் தேதி பென்சில்வேனியாவில் வாக்கெடுப்பு நடக்கிறது.

இரு பெரும் மாநிலங்களில் வென்ற போதிலும் கூட இன்னும் ஓபாமாவை விட ஹில்லாரி பின் தங்கியே உள்ளார். அடுத்து நடைபெறவுள்ள வாக்கெடுப்புகளிலும் அவர் வென்றாக வேண்டும்.

ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முடிவாகி விட்டால் அதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் டென்வரில் நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டில் முறைப்படி அறிவிக்கப்படும்.

குடியரசு கட்சி வேட்பாளரானார் மெக்கெய்ன்:

மறுபக்கம் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் வெற்றி பெற்றுள்ளார்.

மெக்கெய்ன், வெர்மான்ட், ஓஹியோ, டெக்ஸாஸ், ரோட் ஐலண்ட் ஆகிய மாகாணங்களில் பெற்ற வெற்றியால், அவருக்கு அடுத்து உள்ள மைக் ஹக்கபியை விட முன்னிலை பெற்றார். மேலும், வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட தேவையான 1191 வாக்குகளை விட அதிகம் பெற்று வேட்பாளராகியுள்ளார்.

இன்று மெக்கெய்னை குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் ஜார்ஜ் புஷ் முறைப்படி அறிவிக்கவுள்ளார். வெள்ளை மாளிகையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

71 வயதாகும் மெக்கெய்ன் அரிசோனா மாகாண செனட்டர் ஆவார். முன்னாள் கடற்படை போர் விமான பைலட் ஆவார். வியட்நாம் போரில் அமெரிக்க படை ஈடுபட்டபோது அங்கு வியட்நாம் படைகளால் கைது செய்யப்பட்டு கைதியாகவும் இருந்தவர்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஓபாமா அல்லது ஹில்லாரியை எதிர்த்து மெக்கெய்ன் போட்டியிடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+