வெறுக்கப்படும் பீகாரிகள்-விஷம் காக்கும் தாக்கரே
மும்பை: இந்திய மக்கள் பீகாரிகளை வெறுக்கின்றனர். அவர்கள் எங்கு போனாலும் பிரச்சினை செய்பவர்களாகவே உள்ளனர் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் காட்டமான கட்டுரை ஒன்றை தாக்கரே எழுதியுள்ளார்.
பீகாரிகளையும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும் இந்தியாவின் எந்தப் பகுதி மக்களுக்கும் பிடிக்கவில்லை. தென்னிந்தியர்களும் அவர்களை வெறுக்கிறார்கள். அஸ்ஸாமிலும் அவர்களைக் கண்டாலே கொதிப்படைகிறார்கள். பஞ்சாப், சண்டிகரிலும் கூட இதே நிலைதான்.
பீகாரிகள் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். அந்தந்த பகுதி மக்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது மும்பையையும், மராத்தி மக்களையும், மகாராஷ்டிர மக்களையும் குறி வைத்து போரே தொடுத்துள்ளனர்.
லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகளும், அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி பிரபுநாத் சிங் போன்றவர்களும் இருக்க வேண்டிய இடம் சிறைதான்.
மும்பை மக்களின் மூளை அழுகி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை. அவர்களது பேச்சு மும்பையில் வசிக்கும், அவர்களின் ரத்தங்களுக்குத்தான் (வட இந்தியர்களுக்கு) பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணரவில்லை.
கால்நடைகளுக்குப் போடும் தீவணத்தையே சாப்பிட்டவர்கள் பீகார் அரசியல்வாதிகள் (லாலு மீதான கால்நடைத் தீவண ஊழலை குறிப்பிடுகிறார்) என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
பால் தாக்கேரவின் இந்த கட்டுரைக்கு பீகார், உ.பி. மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பால் தாக்கரே மீது லோக்சபாவில் உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்துள்ளனர்.
தாக்கரேவின் கருத்துக்கள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிப்பதாகும். அதை விட நாடாளுமன்றத்தையே அவமதிக்கும் வகையில் எழுதியுள்ளார் தாக்கரே. அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த உரிமை மீறல் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூறுகையில், இதுகுறித்து சட்ட நிபுணர்களின் கருத்து கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தேஷ்முக்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications