உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் அகதி முகாம்கள்
மதுரை: தென் மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாம்களை உளவுத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் விடுதலை புலிகள் ஊடுருவலாம் என உளவுப் பிரிவு கருதுகிறது.
இதையடுத்து, மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் உள்ள முகாம்களை போலீசாருடன் உளவுத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து உளவுத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருப்போர், புதிதாக முகாமுக்கு வந்திருப்போர், அரசு ஒப்புதலுடன் வெளியிடங்களில் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்போர் குறித்து தகவல் அறிக்கை தயார் செய்து வருகிறோம்.
லாட்ஜ்களில் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது தங்குகிறார்களா என்று விசாரித்து வருகிறோம். வாகன தணிக்கையும் தீவிரமாக நடக்கிறது.
விடுதலை புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரையில் கூடல்நகர், திருவாதவூர், உச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகாம்களில் 6,000 பேர் வசிக்கின்றனர். அரசு அனுமதியுடன் வெளியிடங்களில் தங்கியிருக்கும் 160 அகதி குடும்பங்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications