ராக்கெட் லாஞ்சருடன் சிக்கிய வெளிநாட்டு தம்பதி
சென்னை: சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டு தம்பதியின் காரில் ராக்கெட் லாஞ்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு வியட்நாமிலிருந்து பயணிகள் கப்பல் வந்தது. அந்தக் கப்பலில் மலேசியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு கார் இருந்தது. அந்தக் காரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் ராக்கெட் லாஞ்சரும், கண்ணிவெடிகயும் இருந்தது தெரிய வந்தது.
இந்தக் கார், அதே கப்பலில் பயணம் செய்த ஐரோப்பாவைச் சேர்ந்த நிலான் தம்பதிக்குச் சொந்தமானது. இதையடுத்து அந்த தம்பதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது கம்போடியாவில் தாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது அங்குள்ள ஒரு விற்பனை நிலையத்தில் அழகுப் பொருளாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த ராக்கெட் லாஞ்சரை வாங்கியதாக தெரிவித்தனர். கண்ணி வெடியையும் அங்குதான் அவர்கள் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம், கண்ணி வெடியையும், ராக்கெட் லாஞ்சரையும் இப்படி கொண்டு வருவது சட்ட விரோதம் என்று கூறிய சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications