சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சட்ட மாணவர்கள் கைது
சென்னை: இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை யானைக்கவுனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நள்ளிரவில் பாரிமுனை அருகே 4 மாணவர்கள் குடித்து விட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தனர். செந்தில் குமார் அவர்களை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை கிண்டடித்தர். மேலும் அவரது சட்டையில் இருந்த பேட்ஜ்ஜை பறித்தோடு சட்டையையும் கிழித்தனர்.
பேட்ஜ்ஜால் அவரது கழுத்தில் கீறினர். இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர் திருப்பித் தாக்கவே அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்தக் கும்பலில் இருந்த 2 பேரை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களான மீனாட்சி சுந்தரம் ( 25), ராஜூ (24) எனத் தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications